ஏப்.12ல் ராகுல், 15ல் மோடி திருநெல்வேலியில் பிரசாரம்
ஏப்.12ல் ராகுல், 15ல் மோடி திருநெல்வேலியில் பிரசாரம்
ADDED : ஏப் 10, 2024 06:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி : திருநெல்வேலியில் ஏப். 12ல் காங்., முன்னாள் தலைவர் ராகுல் ,காங்., வேட்பாளர் ராபர்ட் புரூசை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். திருநெல்வேலி கோர்ட் வளாகம் எதிரே உள்ள திடலில் பிரசார மேடை அமைய உள்ள இடத்தை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு , தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன், டி.பி.எம். மைதீன்கான் பார்வையிட்டனர்.
பிரதமர் மோடி
இதனிடைய திருநெல்வேலி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மற்ற தொகுதி கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஏப்.15ல் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ரோடு ஷோ மூலம் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

