ADDED : மார் 13, 2025 03:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் வீரேந்திரமல் ஜெயின் 67. சென்னையில் ரியல் எஸ்டேட் உட்பட பலதொழில்களை நடத்தி வருகிறார்.
இவர், கூட்டாளிகள் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக, அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
சென்னையில் உள்ள வீரேந்திரமல் ஜெயினுக்கு சொந்தமான, 'அரிஹந்த் ஷெல்டர்ஸ்' நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரின் நண்பர்களான பைனான்சியர் மோகன்குமார், அசோக் நகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அய்யப்பன் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.