ADDED : ஜூன் 19, 2024 08:22 PM

சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
கும்பகோணம், கடலூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது
இதன்படி கும்பகோணம், பாபநாசம், அம்மாபேட்டை, பசுபதிகோவில் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. திருவையாறு பகுதியை சேர்ந்த திருக்காட்டுப்பள்ளி செங்கிப்பட்டி, அன்னப்பன்பேட்டை, திருப்பனந்தாள், திருவிடைமருதூர் சோழபுரம் பகுதிகளிலும் மழை பெய்தது.
காற்றுடன் பெய்த மழை காரணமாக தஞ்சாவூர் ரயில்நிலையத்தின் 2--ம் பிளாட்பாரத்தில் உள்ள ஓய்வு அறையின் மேற்கூரை சேதம் அடைந்தது நல்வாய்ப்பாக யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி திருத்துறைப்பூண்டி , குத்தாலம் நரிமணம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கண்டமங்கலம், குருங்குடி நாட்டார்மங்கலம், லால்பேட்டை, குமராட்சி, லால்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
திருவாரூர்:கமலாபுரம் சேர்ந்தமங்கலம், கங்களாச்சேரி மாங்குடிபுலிவலம்,நன்னிலம்உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சுற்றுவட்டார பகுதிகளான வடதண்டலம் புளியரம்பாக்கம், விண்ணவாடி,அணக்காவூர் பகுதிகளில் மழை பெய்தது.
கனமழை காரணமாக வரும் 23ம் தேதி வரை சுழல்காற்று வீசக்கூடும் என தூத்துக்குடி மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழகத்தில் மன்னார் வளைகுடா பகுதியில் சுமார் 35 முதல் 45 கி.மீ வரையில் சுழல் காற்று வீசக்கூடும். எனவும் வரும் 20-ம் தேதி இரவு வரையில் சுமார் 55 கி.மீ வேகத்திற்கு சுழல்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்து உள்ளது.
இதனிடையே கரூர் பரமத்தியில் 101.3 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெப்பம் பதிவாகி இருந்தது. தொடர்ந்து பாளையங்கோட்டையில் 100.4 டிகிரி பாரன்ஹீட் அளவு வெப்பநிலை பதிவாகி இருந்தது.

