ADDED : செப் 08, 2024 02:07 AM
சென்னை:சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கை:
மத்திய மற்றும் அதை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு பகுதியானது, நேற்று வடக்கு திசையில் நகர்ந்து, வடமேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.
இது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அடுத்த மூன்று நாட்களில், மேற்கு, வடமேற்கு திசையில், மேற்கு வங்கம் - வடக்கு ஒடிசா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளை நோக்கி நகரலாம்.
தமிழகத்தில் இன்று முதல் 13ம் தேதி வரை, ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் மழை பெய்யலாம். சென்னையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சென்னை மணலியில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.