ADDED : மார் 24, 2024 06:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாப்பிடுவதில் மிதமாக இருக்க வேண்டும். அதிலும் உணவை அதிகமாகவோ முற்றிலும் குறைக்கவோ கூடாது.
இதுகுறித்து நபிகள் நாயகம் கீழ்க்கண்டவற்றை கூறியுள்ளார்.
'ஆதமுடைய மகன் நிரப்பும் பைகளில் மிகக்கெட்டது அவனது வயிறாகும். சாப்பிடுவதாக இருந்தால் மூன்றில் ஒரு பகுதியை உணவுக்கும், மற்றொரு பகுதியை குடிப்பதற்கும்,மூன்றாவது பகுதியை மூச்சு விடுவதற்கும் ஆக்கிக் கொள்ளட்டும்' என்கிறார்.
தோழரான உமர் (ரலி) இதுபற்றி கூறுகிறார்: வயிறு நிரம்ப உண்பது மற்றும் குடிப்பதில் எச்சரிக்கையாக இருங்கள். மீறினால் அது ஆரோக்கியத்தை கெடுக்கும். தொழுகையில் சோம்பலை ஏற்படுத்தும். நிச்சயமாக இறைவன் கொழுத்த உடல்களை முற்றிலும் வெறுக்கிறான். எனவே உடல்நலத்துடன் வாழுங்கள்.
இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:48 மணி

