ADDED : மார் 31, 2024 06:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'இறை நினைவில் ஒருவனது உதடு அசையும் போதும் நான் அவனுடன் இருக்கிறேன்' என இறைவன் சொல்வதாக நபிகள் நாயகம் கூறுகிறார். அதாவது இந்த நினைவுடன் தொழுகையில் ஈடுபடுபவனே சிறந்தவன்.
கீழ்த்தரமான ஆசைகளைத் துாண்டும் சொல், தீய செயல்களில் இருந்து விலக்கி அவனை காப்பாற்றுகிறது. தர்ம வழியில் வாழவும், செல்வத்தை நல்ல வழியில் செலவழிக்கவும் துாண்டுகிறது. கஞ்சத்தனத்தை அகற்றுகிறது. பொதுவாக மனித உடலானது உணவும், நீரும் கொண்டு அமைந்தது. அதுபோல் மனமும் நல்ல சிந்தனைகளை கொண்டிருக்க வேண்டும். இந்த சிந்தனை உருவாக தொழுகை உதவுகிறது.
இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:43 மணி

