ADDED : ஏப் 02, 2024 06:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனிதன் தன் வாழ்நாளில் பாவங்களை செய்கிறான். பின் கஷ்டம் வரும் போது, 'செய்த பாவத்திற்கு இப்போது தண்டனை கிடைக்கிறதே' என மனம் அவனிடம் பேசும். இதை யாரிடமும் சொல்லி அழவும் முடியாது. இதற்கு ஒரே தீர்வுதான் உள்ளது.
எந்த சூழ்நிலையிலும் 'பாவம் செய்ய மாட்டேன்' என சத்தியம் செய்து கொள்ளுங்கள். பின் அதன்படி நடங்கள். அதுபோல் செய்த பாவத்திற்கு தண்டனையை ஏற்றுக்கொள்ளுங்கள். இதன் மூலம் மறுமை நாளில் பலனை காண்பீர்கள்.
பாதையில் கிடக்கும் முள்ளை அகற்றுங்கள். உங்களிடம் வழி கேட்பவர்களுக்கு வழி காட்டுங்கள். வாயில்லா ஜீவன்களுக்கு தண்ணீர், உணவு கொடுங்கள். இந்த செயல்களும் மறுமைக்கு உதவும்.
இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:43 மணி

