ADDED : மார் 12, 2025 06:16 PM

உழைத்து வாழ்வோம்
யாராக இருந்தாலும் உழைப்பது அவசியம் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நபிகள் யகம். இவர் தன் வேலைகளை தானே செய்து கொள்வார். உதாரணமாக உடைகளை தைப்பது, ஆடுகளிடம் பால் கறப்பது போன்ற பணிகளை செய்வார். மனைவிக்கு சமையலில் உதவியாகவும் இருந்தார். ஒருநாள் தோழர்களுடன் நீண்ட துாரம் பயணம் செய்தார். வழியில் உணவு சமைப்பதற்காக தானே விறகுகளை சேகரித்து வருவதாக கூறினார். அப்போது தோழர்கள், 'நீங்கள் எதற்கு சிரமப்படுகிறீர்கள். நாங்கள் செய்கிறோம்' என்றனர்.
அதற்கு நாயகம், 'எல்லோரும் சேர்ந்துதானே சாப்பிடப் போகிறோம். பிறகு ஏன் உழைப்பதில் பாரபட்சம். அனைவரும் சேர்ந்து செய்தால் வேலையும் எளிதாக முடியுமல்லவா. இதையே இறைவனும் விரும்புவான்' என்றார்.
பார்த்தீர்களா... யாராக இருந்தாலும் அவரவர் கடமையை அவரவரே செய்ய வேண்டும். உழைப்பை உயிராக மதிக்க வேண்டும்.
இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:55 மணி