ADDED : மார் 02, 2025 07:00 PM

வாய்ப்பை பயன்படுத்து
நோன்பு இருப்பவர் நபிகள் நாயகம் சொல்வதை பின்பற்றினால் மனம் ஒருநிலைப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
''நோன்பிருக்கும் போது வீணாக குரல் உயர்த்தி பேசாதே. யாராவது திட்டினால் அல்லது சண்டைக்கு வந்தால் 'நான் நோன்பு இருப்பவன். பிரச்னை வேண்டாம்' என கூறு'' என்கிறார். இப்படி செய்தால் வீண் பிரச்னையே வராது. சரி... நோன்பு காலத்தில் மட்டும் இதை செய்துவிட்டு ஷவ்வால் பிறந்ததும் மீண்டும் பழையதை ஆரம்பிக்கலாம் என நினைக்கக் கூடாது. நோன்பு என்பது பட்டினியாக இருப்பது மட்டுமல்ல. மனதை பக்குவப்படுத்தவும் செய்யும். நல்ல பண்புகளையும் வளர்க்கும்.
இந்த மாதத்தில் செய்யும் நன்மைக்கு பத்து முதல் எழுநுாறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படும். நோன்பு இருப்பவரின் வாய்வாடை கஸ்துாரியின் நறுமணத்தை விட சிறந்தது. எனவே இந்த வாய்ப்பை நழுவ
விடக்கூடாது. மனத்துாய்மையுடன் நோன்பு இருந்து நற்கூலி பெறுவோம். இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:35 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 5:00 மணி