ADDED : ஏப் 11, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், 86, கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மற்றும் பா.ம.க., வேட்பாளர்களை ஆதரித்து தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார்.
விழுப்புரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட வானுார் சட்டசபை தொகுதி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடில் கடந்த 8ம் தேதி மாலை பா.ம.க., வேட்பாளர் முரளிசங்கரை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில் ராமதாஸ் பேசினார்.
அப்போதே அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆம்புலன்சில் வந்த டாக்டர்கள் குழு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், திண்டிவனம் வ.உ.சி. திடலில் நேற்று மாலை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பங்கேற்பதாக இருந்த பிரசார கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
- நமது நிருபர் -

