தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ராமலிங்க பிரதிஷ்டை விழா ராமேஸ்வரத்தில் நிறைவு

ராமலிங்க பிரதிஷ்டை விழா ராமேஸ்வரத்தில் நிறைவு

ராமலிங்க பிரதிஷ்டை விழா ராமேஸ்வரத்தில் நிறைவு


ADDED : ஜூன் 17, 2024 12:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2024 12:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா நிறைவு பெற்றது.

ராமாயண வரலாற்றில் தொடர்புடைய ராமேஸ்வரம் கோயில் தலவரலாறு குறித்து பக்தர்களுக்கு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ராமலிங்க பிரதிஷ்ட விழா நடக்கிறது. இந்தாண்டு ஜூன் 14ல் ராவணன் வதம் செய்யும் நிகழ்ச்சியுடன் ராமலிங்க பிரதிஷ்டை விழா துவங்கியது.

ராமாயண வரலாற்றில் சஞ்சீவி மலையில் இருந்து அனுமன் சிவலிங்கத்தை எடுத்து கொண்டு ராமேஸ்வரம் வரும் காட்சி போல், நிறைவு விழா நாளான நேற்று கோயில் சன்னதி முன் அனுமன் வேடமணிந்த கோயில் கைங்கரியம் சந்தோஷ் சிவலிங்கத்தை கையில் எடுத்து கொண்டு கோயில் முதல் பிரகாரத்தில் வலம் வந்தார்.

பின் சுவாமி சன்னதியில் சிறப்பு அபிஷேகம், பூஜை, மகா தீபாராதனை நடந்தது. இதில் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார், பேஸ்கார் கமலநாதன், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் குவிந்தனர்


விடுமுறைதினத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி அக்னி தீர்த்த கடற்கரையில் திதி, தர்ப்பணம் பூஜை செய்து கடலில் புனித நீராடினர். இதன்பின் கோயில் வளாகத்தில் 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். பின் சுவாமி, அம்மன் சன்னதியில் தரிசித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us