தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ராமலிங்கம் கொலை வழக்கு தகவல் அளித்தால் சன்மானம் 

ராமலிங்கம் கொலை வழக்கு தகவல் அளித்தால் சன்மானம் 

ராமலிங்கம் கொலை வழக்கு தகவல் அளித்தால் சன்மானம் 


ADDED : ஜூலை 29, 2024 12:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2024 12:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம்; பா.ம.க., பிரமுகர். கடந்த, 2019 பிப்., 5-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு, தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ.,க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை என்.ஐ.ஏ., சார்பில், திருப்பூரின் பல பகுதிகளில் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், 'ராமலிங்கம் கொலை வழக்கில் தொடர்புடைய தஞ்சாவூர், திருப்புவனம், முகமது அலி ஜின்னா, 37, மேலக்காவேரி, அப்துல் மஜீத், 40, பாபநாசம், புர்ஹானுதீன், 31, திருவிடைமருதுார், ஷாஹீல்ஹமீத், 30, திருமங்கலக்குடி, நபீல்ஹாசன், 31, ஆகியோர்.

இவர்கள் குறித்த தகவல் தருபவருக்கு, நபர் ஒருவருக்கு, 5 லட்சம் ரூபாய் வீதம், 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை சன்மானமாக வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 'தகவல் தெரிவிப்பவர் விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும். தொடர்பு கொள்ள மொபைல் எண்: 94999 45100, 99623 61122; இ-மெயில்: infoche.nia@gov.in' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us