இலங்கை சிறையில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை
இலங்கை சிறையில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை
ADDED : ஏப் 27, 2024 02:19 AM

ராமேஸ்வரம்:ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் வாடிய ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிப்.4, 7ல் ராமேஸ்வரத்தில் இருந்து , 3 விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இப்படகின் டிரைவர்களாக இருந்த ராபர்ட் 45, பெக்கர் 38, ஜால்சன் 47, ஆகியோரை தவிர மற்ற மீனவர்கள் விடுவிக்கப்பட்டு ராமேஸ்வரம் வந்தனர்.
இந்த படகு டிரைவர்கள் 3 பேருக்கும் இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்ததால் கொழும்பு வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை எதிர்த்து மீனவர்கள் தரப்பில் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.
இதனை விசாரித்த நீதிபதி மரியசூசை தாசன் , இவர்கள் டிரைவர் என்பதற்கு ஆதாரம் உள்ளதா என மீன்துறை அதிகாரியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அதிகாரிகள் ஆதாரம் இல்லை என்று கூறியதால் மூவரையும் விடுதலை செய்து ஏப்.30ல் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டார்.
ஏப்.30 க்கு பின் 3 மீனவர்களும் விமான மூலம் சென்னை வந்திறங்க உள்ளனர்.

