வைகை, பல்லவன் ரயில்களில் முன்பதிவு பெட்டி குறைப்பு
வைகை, பல்லவன் ரயில்களில் முன்பதிவு பெட்டி குறைப்பு
ADDED : மார் 15, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:வைகை, பல்லவன் ரயில்களில் பயணியரின் வசதிக்காக தலா ஒரு 'முன்பதிவு சேர் கார்' பெட்டி குறைக்கப்பட்டு, ஒரு முன்பதிவில்லா பெட்டி கூடுதலாக இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மே 11 முதல் மதுரை - எழும்பூர் வைகை, எழும்பூர் - காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும், மே 12 முதல் எழும்பூர் - மதுரை வைகை, காரைக்குடி - எழும்பூர் பல்லவன் ரயில்களிலும் இம்மாற்றம் நடைமுறைக்கு வருகிறது.
மேற்கண்ட ரயில்கள், 3 ஏசி சேர்கார் பெட்டிகள், 12 சேர்கார் பெட்டிகள், ஒரு பேன்ட்ரி கார், 4 பொது பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகள் பெட்டி, ஒரு சரக்குப்பெட்டி என, 22 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.