எதிர் அணியில் உள்ளதால் விசிக.,வுக்கு கேட்ட சின்னம் ஒதுக்க மறுப்பு: திருமாவளவன் குற்றச்சாட்டு
எதிர் அணியில் உள்ளதால் விசிக.,வுக்கு கேட்ட சின்னம் ஒதுக்க மறுப்பு: திருமாவளவன் குற்றச்சாட்டு
ADDED : மார் 28, 2024 01:21 PM

உளுந்தூர்பேட்டை: 'எதிர் அணியில் உள்ளதால் மதிமுக, விசிகவுக்கு கேட்ட சின்னம் ஒதுக்க மறுக்கிறார்கள்' என விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டி உள்ளார்.
உளுந்தூர்பேட்டையில் விசிக., தலைவர் திருமாவளவன் தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது: ஜி.கே வாசனுக்கு மறந்தே போன சின்னம் சைக்கிள் சின்னம். அந்த சின்னம் உடனே வழங்கப்பட்டு விட்டது. ஆனால் எதிரணியில் இருப்பதால், மதிமுக மற்றும் விசிக.,வுக்கு சின்னம் இல்லை.
நொண்டி சாக்கு சொல்கிறார்கள். ஆனால் நம்முடைய சின்னம் பானை சின்னம் தான். எந்த குழப்பமும் இல்லை. கடைசி நேரத்தில் சின்னம் மாறும் என்று யாரும் கருத வேண்டாம்.எவ்வளவு வெளிப்படையாக பா.ஜ., எதிர்ப்பவர்களை ஓரங்கட்டுகிற முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
விடுதலை சிறுத்தைக்கு மீண்டும் 2 தொகுதிகளை வழங்கி கூட்டணியை திமுக உறுதிப்படுத்தி உள்ளது. நமக்கு எதிர் அணியில் உள்ளவர்கள் கூட்டணியாகவே இல்லை. அதிமுக உடன் யார் சேர்ந்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

