ADDED : ஏப் 23, 2024 12:22 AM
சென்னை: மாவட்ட கல்வி அதிகாரியான டி.இ.ஓ., உள்ளிட்ட, மூன்று பதவிகளுக்கான தேர்வு முடிவுகளை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட கல்வி அதிகாரி பதவியில், 11 காலியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு நவம்பரிலும்; குரூப் - 7 ஏ நிலையில், செயல் அலுவலர் நிலை - 1 பதவியில், 9 காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு ஜனவரியில் தேர்வு நடந்தது. இரண்டு தேர்வுகளிலும், நேர்முக தேர்வுக்கு தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த கணக்கு பதவியில், 52 காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு பிப்ரவரியில் தேர்வு நடந்தது. இதில், கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

