sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முதற்கட்ட கவுன்சிலிங் நிறைவு மீதம் 1,423 எம்.பி.பி.எஸ்., இடம்

/

முதற்கட்ட கவுன்சிலிங் நிறைவு மீதம் 1,423 எம்.பி.பி.எஸ்., இடம்

முதற்கட்ட கவுன்சிலிங் நிறைவு மீதம் 1,423 எம்.பி.பி.எஸ்., இடம்

முதற்கட்ட கவுன்சிலிங் நிறைவு மீதம் 1,423 எம்.பி.பி.எஸ்., இடம்


ADDED : செப் 11, 2024 11:32 PM

Google News

ADDED : செப் 11, 2024 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ள நிலையில், 1,423 எம்.பி.பி.எஸ்., - 1,566 பி.எடி.எஸ்., இடங்கள் மீதம் உள்ளன.

அதாவது, தமிழக அரசு கல்லுாரிகளில், 75 இடங்கள் உட்பட, சுயநிதி கல்லுாரிளுடன் சேர்த்து அரசு ஒதுக்கீட்டுக்கு, 397 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 704 பி.டி.எஸ்., இடங்கள் மீதம் உள்ளன. மேலும், 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில், 23 பி.டி.எஸ்., - மாற்றுத்திறனாளிகள் பிரிவில், 2 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.

சுயநிதி கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில், 1,024 எம்.பி.பி.எஸ்., - 839 பி.டி.எஸ்., இடங்கள் என, மொத்தம், 1,423 எம்.பி.பி.எஸ்., - 1,566 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன.

இந்த இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், https://tnmedicalselection.net/ என்ற இணையளத்தில் துவங்கியுள்ளது. அரசு ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த, 28,819 பேரும்; நிர்வாக ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த, 13,417 பேரும் கவுன்சிலிங்கில் பங்கேற்க, 13ம் தேதி மாலை 5:00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

பின், 14ம் தேதி நண்பகல் 12:00 மணி முதல், 16ம் தேதி மாலை 5:00 மணி வரை விருப்பமான கல்லுாரிகளில் இடங்களை தேர்வு செய்யலாம். இட ஒதுக்கீடு விபரம், 19ம் தேதி வெளியிடப்படும். வரும், 26ம் தேதிக்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும் என, மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us