தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஓட்டுப்பதிவு முடிந்ததும் விதிகளை தளர்த்த கோரிக்கை

ஓட்டுப்பதிவு முடிந்ததும் விதிகளை தளர்த்த கோரிக்கை

ஓட்டுப்பதிவு முடிந்ததும் விதிகளை தளர்த்த கோரிக்கை


ADDED : ஏப் 11, 2024 08:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2024 08:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு எனும், 'பேட்டியா' சார்பில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுக்கு அனுப்பிய கடிதத்தில், தலைவர் ராஜமாணிக்கம் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில், 20 நாட்களுக்கு மேலாக தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், மளிகை, ஜவுளி, ஹார்டுவேர், எலக்ட்ரிக்கல் என பல தரப்பினர் விற்பனை மற்றும் கொள்முதலுக்கு ரொக்கமாக பணத்தை எடுத்து செல்ல சிரமப்படுகின்றனர்; பொருளாகவும் எடுத்து செல்ல முடியவில்லை.

வரும் 19ல் ஓட்டுப்பதிவுக்கு பிறகும், ஜூன் 4ல் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, தேர்தல் நடத்தை விதி தொடரும் என தேர்தல்ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் தொழில், வணிகம் முற்றிலும் முடங்கிவிடும் சூழல் உருவாகும்.

எனவே, ஓட்டுப்பதிவு முடிந்ததும், தேர்தல் நடத்தை விதிகளை வாபஸ் பெற அறிவிப்பு வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us