தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ உயருது உளுந்து, குறையுது முண்டு வத்தல்

உயருது உளுந்து, குறையுது முண்டு வத்தல்

உயருது உளுந்து, குறையுது முண்டு வத்தல்


ADDED : ஜூலை 13, 2024 08:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2024 08:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:விருதுநகர் மார்கெட்டில் உளுந்து லயன் 100 கிலோவிற்கு ரூ.200 உயர்ந்து ரூ. 9700, முண்டு வத்தல் 100 கிலோவிற்கு ரூ. 2000 குறைந்து ரூ.11,000 முதல் ரூ.15,000 என விற்கப்படுகிறது.

இங்கு க.எண்ணெய் 15 கிலோ ரூ.2750, ந.எண்ணெய் 15 கிலோ ரூ.6270, பாமாலின் 15 கிலோவிற்கு ரூ. 30 குறைந்து ரூ. 1460, சீனி 50 கிலோ ரூ. 2080, ரவை 30 கிலோ ரூ. 1480, மைதா 90 கிலோ ரூ. 4520, பொரிகடலை 55 கிலோ ரூ. 5400, கொண்டக்கடலை 100 கிலோவிற்கு ரூ. 50 உயர்ந்து ரூ. 7450 என விற்கப்படுகிறது.

துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோ ரூ. 16,500, உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோ ரூ. 16,000, குண்டூர் வத்தல் 100 கிலோ ரூ. 15,000 முதல் ரூ. 18,000, தொலிபருப்பு 100 கிலோ ரூ. 10,200, பாசிப்பருப்பு 100 கிலோ ரூ. 10,400, பட்டாணி பருப்பு 100 கிலோ ரூ. 5200 என விற்பனை செய்யப்படுகிறது.

உளுந்து நாடு 100 கிலோ ரூ. 9100, மல்லி லயன் 40 கிலோ ரூ. 3400 முதல் ரூ. 3550, மல்லி நாடு 40 கிலோ ரூ. 3000 முதல் ரூ. 3500, பாசிப்பயறு லயன் மீடியம் 100 கிலோ ரூ. 8500, கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ. 200 குறைந்து ரூ. 4800, எள் புண்ணாக்கு 50 கிலோவிற்கு ரூ. 300 குறைந்து ரூ. 1700 என விற்பனை செய்யப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us