ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி; கேன்டீன் ஓனருக்கு சிக்கல்
ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி; கேன்டீன் ஓனருக்கு சிக்கல்
ADDED : செப் 17, 2024 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : 'தேர்தலின் போது சிக்கிய, 4 கோடி ரூபாய், ரயில்வே கேன்டீன் உரிமையாளருக்கு சொந்தமானது இல்லை' என, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
லோக்சபா தேர்தலின் போது, தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பிடிபட்ட, 4 கோடி ரூபாய், பா.ஜ., - எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என, கூறப்படுகிறது. இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, 4 கோடி ரூபாய்க்கு, ஈரோடு ரயில்வே ஸ்டேஷன், 1வது நடைமேடையில் கேன்டீன் நடத்தி வரும் முஸ்தபா, 53, என்பவர் உரிமை கோரினார். அவரது வங்கி கணக்கு, பண பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்து, அந்த பணம் முஸ்தபாவுக்கு சொந்தமானது இல்லை என, சி.பி.சி.ஐ.டி., போலீசார் உறுதி செய்துள்ளனர். அவரை கைது செய்யவும் முடிவு செய்துள்ளனர்.