ADDED : ஆக 18, 2024 10:18 AM

சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட தேவநாதன் வீடு உட்பட 12க்கு மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில், 150 ஆண்டுகளாக, 'மயிலாப்பூர் ஹிந்து பர்மனன்ட் பண்டு' என்ற நிதி நிறுவனம் செயல்படுகிறது. இதன் தலைவராக தேவநாதன் இருக்கிறார். நிதி நிறுவனத்தில், 5,000க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
525 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதன் தலைவர் தேவநாதன் கைது செய்யப்பட்டார். சென்னை பாண்டி பஜாரில் உள்ள தேவநாதன் வீடு, மயிலாப்பூரில் உள்ள அலுவலகம் உட்பட 12க்கும் மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை செய்தனர்.
நிதி நிறுவன அலுவலகத்தில் ரூ.4 லட்சம் பணம், 2 கார்கள், ஹார்டுடிஸ்குகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

