ADDED : மார் 13, 2025 12:10 AM

சென்னை:'பைக்' பந்தய வீரர் உட்பட இருவருக்கு, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை வாயிலாக, 5.50 லட்சம் ரூபாய் நிதியுதவியை, துணை முதல்வர் உதயநிதி நேற்று வழங்கினார்.
'சாம்பியன்ஸ் ஆப் பியூச்சர் அகாடமி' தேர்வு செய்துள்ள, பைக் பந்தய வீரர் ரெஹான்கான் ரஷீத்துக்கு ஐந்து லட்சம் ரூபாய்; தடகள வீராங்கனை தபிதா பயிற்சி செலவுக்கு, 50,000 ரூபாய்க்கான காசோலையை, துணை முதல்வர் உதயநிதி, நேற்று வழங்கினார்.
சமீபத்தில், நுஞ்சாகு உபகரணம் வாயிலாக, ஒரு நிமிடத்தில், 159 முறை, 'நுஞ்சாகு பேக் ஹேண்ட்ரோல்' செய்து, கின்னஸ் சாதனை படைத்தவர் ஜான்சிராணி லட்சுமிபாய்.
இவர், நேற்று துணை முதல்வரை சந்தித்து, தன் சான்றிதழை காட்டினார். அவருக்கு உதயநிதி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.