ADDED : மார் 29, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டசபை தொகுதி சேத்துார் அடுத்த சொக்கநாதன் புத்துார்- முகவூர் ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்ஆண்டாள் தலைமையிலான குழுவினர் பாலமுருகன் என்பவர் ஓட்டி வந்த ஏ.டி.எம்.,மிற்கு பணம் நிரப்பும் தனியார் வேனை சோதனை செய்தனர்.
அதில் ரூ. 1 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதி வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்வதாக அவர் தெரிவித்தார்.
ஆனால் பணம் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்ட வாகன பதிவு எண் ஆவணத்தில் இருந்ததற்கும், இந்த வேன் பதிவு எண்ணும் வேறாக இருந்ததாக கூறி பணத்தை பறிமுதல் செய்து தாசில்தார் ஜெயபாண்டியிடம் ஒப்படைத்தனர்.

