ADDED : ஜூலை 11, 2024 09:54 PM

கூடலூர்:கூடலூரில், நில அளவை பணிக்காக, 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற, கூடலூர் தாசில்தார் ராஜேஸ்வரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் தாசில்தாராக பணியாற்றி வருபர் ராஜேஸ்வரி. இவர் பல்வேறு, பணிக்காக பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், தோட்டமூலா பகுதியை சேர்ந்த உம்முசல்மா, என்பவர் நிலத்தை அளவீடு செய்வதற்காக ஐகோர்ட் உத்தரவு பெற்றுள்ளனர். இப்பணிக்காக அவர், கூடலூர் தாசில்தார் ராஜேஸ்வரியை அணுகி உள்ளார். இதற்காக, உம்முசல்மாவிடம் இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற சம்மதம் தெரிவித்துள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத, உம்மு சல்மாவா ஊட்டி லஞ்சம் கொடுக்கும் போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசர் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் அறிவுரைப்படி, இன்று, இரவு உம்மு சல்மா கூடலூர் தாசில்தாரிடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார். ஊட்டி லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் பரிமளாதேவி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச பணத்துடன் தாசில்தாரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

