ADDED : ஜூன் 10, 2024 12:51 AM

சென்னை: சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில், இரண்டு ஆண்டுகளாக சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் கணேசன். தற்போது, சேலத்தில் அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த, 2016ம் ஆண்டில் கணேசன், திண்டுக்கல் மாவட்டம், பழனி டவுன் காவல் நிலையத்தில், எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தார். அப்போது, நிலப்பிரச்னை தொடர்பான புகார் ஒன்றில், கணேசன் லஞ்சம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, உள்துறை செயலர் அமுதா உத்தரவிட்டார். அதன்படி, லஞ்ச ஒழிப்பு போலீசார், புகார்தாரர் மற்றும் கணேசன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். லஞ்சம் வாங்கியது உண்மை என, உறுதி செய்தனர்.
அதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் கணேசனை, 'டிஸ்மிஸ்' செய்து, உள்துறை செயலர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.

