ADDED : ஜூலை 20, 2024 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில், 1,054 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கும் கவுன்சிலிங்கை, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் நேற்று அறிவித்தார்.
இன்று அனைத்து மாவட்டங்களிலும், 'ஆன்லைன்' வழியில் இந்த கவுன்சிலிங் நடக்கிறது. இதற்கான, பணிமூப்பு தேர்வு பட்டியலை இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
இதில், 404 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

