ADDED : மே 25, 2024 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பள்ளிக்கல்வி துறை இயக்குனர் அறிவொளி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கோடை விடுமுறை முடிந்து, புதிய கல்வியாண்டில், அனைத்து பள்ளிகளும் ஜூன் 6ல் திறக்கப்படும். ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் அன்று துவங்கும். எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவக்க, முதன்மை கல்வி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

