ADDED : ஜூன் 25, 2024 10:30 PM
சின்னமனுார் : தேனி மாவட்டம் சீலையம்பட்டியில் அரசு உதவி பெறும் கம்பர் நடுநிலைப்பள்ளி சுவர் இடிந்து 3 ம் வகுப்பு படிக்கும் மாணவி ரித்திகா 7, பலத்த காயமடைந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சீலையம்பட்டியைச் சேர்ந்த சின்னப்பாண்டி - முத்துலட்சுமி தம்பதி மகள் ரித்திகா. இவர் இங்குள்ள அரசு உதவி பெறும் கம்பர் நடுநிலைப் பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கிறார். நேற்று காலை பள்ளிக்குச் சென்ற மாணவி அங்குள்ள வகுப்பறையில் சக மாணவிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பள்ளி சுவரின் ஒரு பகுதி இடிந்து மாணவி மீது விழுந்தது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சின்னமனுார் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எஸ்.ஐ., சுல்தான்பாட்சா, போலீசார் விசாரிக்கின்றனர்.

