வேகும் வெயில்!: ‛தமிழகத்தில் 5 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்‛
வேகும் வெயில்!: ‛தமிழகத்தில் 5 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்‛
ADDED : ஏப் 08, 2024 01:13 PM

சென்னை: தமிழகத்தில் வட தமிழக மாவட்டங்களில் இன்று(ஏப்ரல் 08) 5 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென் மற்றும் வட தமிழக டெல்டா மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 08) 5 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரிக்கும்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 12ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகமாக இருக்க கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையாக 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

