ADDED : ஜூலை 10, 2024 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, 45வது முறையாக நீட்டித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத் துறையால் கடந்தாண்டு ஜூனில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, தற்போது புழல் சிறையில் உள்ளார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவு பெற்றது.
இதையடுத்து, புழல் சிறையில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன், நேற்று பிற்பகல் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அவரின் நீதிமன்ற காவலை, 45வது முறையாக, நாளை வரை நீட்டித்து, நீதிபதி உத்தரவிட்டார்.

