ADDED : மார் 22, 2024 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அமலாக்கத்துறை வழக்கில் இருந்து, தன்னை விடுவிக்க கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்த மனு, நீதிபதி எஸ்.அல்லி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
செந்தில் பாலாஜி சார்பில் டில்லி மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், வழக்கறிஞர் மா.கவுதமன், அமலாக்கத்துறை சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோர் ஆஜராகினர்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி எஸ்.அல்லி, இந்த மனு மீதான உத்தரவை, வரும் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையடுத்து, புழல் சிறையில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, 29வது முறையாக, வரும் 28 வரை நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

