செந்தில் பாலாஜிக்கு 30வது முறையாக காவல் நீட்டிப்பு
செந்தில் பாலாஜிக்கு 30வது முறையாக காவல் நீட்டிப்பு
ADDED : மார் 28, 2024 11:40 PM
சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், கடந்தாண்டு ஜூனில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்தது.
இதையடுத்து, புழல் சிறையில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் முன், செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். பின், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, 30வது முறையாக, ஏப்.,4 வரை நீட்டித்து, நீதிபதி உத்தரவிட்டார்.
மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி நேற்று விடுமுறை என்பதால், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரிய, செந்தில் பாலாஜி மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இந்த வழக்கில் மீண்டும் வாதிட அனுமதி கோரி, செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

