ADDED : ஜூன் 28, 2024 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:விவாகரத்து ஆகாமல் தனியாக வாழும் கணவனுக்கு, தனி ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., அசோகன் கோரிக்கை விடுத்தார்.
சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:
அசோகன்: விவாகரத்து ஆகாமல் தனித்தனியாக வாழும் கணவன், மனைவிக்கு ஒரே ரேஷன் கார்டு இருப்பதால், கணவன் ரேஷன் கார்டை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, தனித்து வாழும் கணவனுக்கு தனி ரேஷன் கார்டு வழங்க வேண்டும்.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு: சட்டப்பூர்வமாக பிரிந்து தனிக்குடித்தனம் நடத்துபவர்களுக்கு தான், அரசு தனி ரேஷன் கார்டு வழங்க முடியும்.
அசோகன்: இதில், நிதி அமைச்சருக்கு தெரியாதது எதுவும் இல்லை.
தங்கம் தென்னரசு: இந்த விவகாரத்தில் எனக்கு எந்த முன் அனுபவமும் இல்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.

