சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் 1,240 வழக்கில் தீர்வு
சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் 1,240 வழக்கில் தீர்வு
ADDED : செப் 17, 2024 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறு வழக்குகள் நீதிமன்றத்தில், சிறு வழக்குகள் நீதிமன்ற முதன்மை நீதிபதி டி.லிங்கேஸ்வரன் தலைமையில், கடந்த 14ம் தேதி, தேசிய லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடந்தது.
அப்போது, லோக் அதாலத்தில் பட்டியலிடப்பட்ட 1,240 வழக்குகளும் சமரசம் செய்யப்பட்டன. இதன் வாயிலாக, 57.95 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு அதற்கான உத்தரவுகள், காசோலைகள் வழங்கப்பட்டன.