sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ தாயகம் திரும்பிய ஏழு பேர்

தாயகம் திரும்பிய ஏழு பேர்

தாயகம் திரும்பிய ஏழு பேர்


ADDED : செப் 06, 2024 01:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2024 01:40 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த, தமிழக மீனவர்கள் ஏழு பேர் நேற்று முன்தினம் தமிழகம் திரும்பினர்.

ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஏழு பேர், கடந்த மாதம் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

அவர்களை விடுவிக்கக்கோரி, முதல்வர் ஸ்டாலின், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார்.

இதையடுத்து, இலங்கையில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர். ஏழு மீனவர்களையும் சில தினங்களுக்கு முன், இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்திய துாதரக அதிகாரிகள் உதவியுடன், நேற்று முன்தினம் இரவு மீனவர்கள் சென்னை திரும்பினர்.

விமான நிலையம் வந்த மீனவர்களை, தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us