மாணவிக்கு பாலியல் தொல்லை :முதல்வர், தாளாளர் உள்பட 7 பேர் கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை :முதல்வர், தாளாளர் உள்பட 7 பேர் கைது
ADDED : ஆக 18, 2024 09:16 PM

கிருஷ்ணகிரியில் என்.சி.சி., முகாமிற்குச் சென்ற பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பள்ளி முதல்வர், தாளாளர், உட்பட 7 பேர் கைது; விசாரணையில், மேலும் 13 மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தகவல் வெளியாகி உள்ளது.தலைமறைவாக உள்ள சிவராமன் உட்பட இருவருக்கு போலீஸ் வலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டனம் பகுதியைச் சேர்ந்தவரும் நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக உள்ள சிவராமன். இவர் பர்கூர் அடுத்த கந்திகுப்பம் அருகே தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு தனி வகுப்பு எடுப்பதாகவும் என்.எஸ்.எஸ் முகாம் குறித்த பயிற்சி அளிப்பதாக பள்ளி முதல்வரை சந்தித்து அனுமதி கோரினார்.இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தின் ஒப்புதல் பேரில் பயிற்சி அளித்து வந்த சிவராமன் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் பள்ளியில் விசாரணை நடத்தினர்.
இவ்வழக்கில், பள்ளி முதல்வர், தாளாளர், உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள சிவராமன் உட்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி பொறுப்பாளரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் வெளியான சில மணி நேரங்களில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவராமனை கட்சி பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

