ADDED : ஜூலை 21, 2024 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : சி.பி.சி.எல்., எனப்படும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக இருந்த அரவிந்த் குமார், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பிரிவு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, சி.பி.சி.எல்., தொழில்நுட்ப பிரிவு இயக்குனர் எம்.ஆர்.எச்.சங்கர், அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக கூடுதல் பொறுப்பேற்றுள்ளார். மெக்கானிக்கல் இன்ஜினியரான சங்கர், பொது நிர்வாகத்தில் எம்.பி.ஏ., பட்டம் பெற்றவர். இவர், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு போன்றவற்றில், 30 ஆண்டுக்கு மேல் அனுபவம் உடையவர்.