ADDED : ஆக 09, 2024 01:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதியாக இருந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 2000ம் ஆண்டு ஜூனில், வங்கதேச தலைநகரான டாக்காவில் உள்ள சக்திபீடங்களில் ஒன்றான, தாகேஸ்வரி கோவிலுக்குச் சென்று வழிபட்டார்.
அங்கு மூன்று நாட்கள் தங்கி சண்டி ஹோமமும் செய்தார். டாக்கா நகரில் அவர் தங்குவதற்கான வசதிகளையும், போலீஸ் பாதுகாப்பையும், வங்கதேச அரசு அளித்தது.
மடாதிபதி வருகையை கொண்டாடும் வகையில், தாகேஸ்வரி கோவிலின் நுழைவில், 'சங்கராச்சாரியர் கேட்' என்ற தோரணவாயில் அமைக்கப்பட்டது.
மேலும், வங்க தேசத்திற்கு விஜயம் செய்த முதல் சங்கராச்சாரியார் என்ற பெருமையையும் ஜெயேந்திரர் பெற்றார்.
வங்கதேசம் முழுக்க இஸ்லாமிய நாடாக இருந்தாலும், காஞ்சி சங்கராச்சாரியாருக்கு, ஒரு தோரணவாயில் அமைக்கப்பட்டுள்ள தகவல் வேகமாக பரவி வருகிறது.