sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அதிகார மோதலில் 4 கோவில் பூசாரிகள் 'பலிகடா' கைது விவகாரத்தில் அதிர்ச்சிகர பின்னணி

/

அதிகார மோதலில் 4 கோவில் பூசாரிகள் 'பலிகடா' கைது விவகாரத்தில் அதிர்ச்சிகர பின்னணி

அதிகார மோதலில் 4 கோவில் பூசாரிகள் 'பலிகடா' கைது விவகாரத்தில் அதிர்ச்சிகர பின்னணி

அதிகார மோதலில் 4 கோவில் பூசாரிகள் 'பலிகடா' கைது விவகாரத்தில் அதிர்ச்சிகர பின்னணி


ADDED : மே 01, 2024 11:30 PM

Google News

ADDED : மே 01, 2024 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் பூசாரிகள், போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தின் அதிர்ச்சி பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகிஉள்ளன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில், ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

கருத்து வேறுபாடு

இக்கோவிலின் பரம்பரை அறங்காவலர் வசந்தா. உதவி கமிஷனராக இருப்பவர் கைலாசமூர்த்தி. கடந்த சில மாதங்களாகவே அறங்காவலருக்கும், உதவி கமிஷனருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி, மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றினை அளித்திருந்தார்.

அதில், 'வனபத்ரகாளியம்மன் கோவில் பூசாரிகள் ரகுபதி, தண்டபாணி, விஷ்ணுகுமார், சரவணன் ஆகியோர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய்துள்ளனர்.

இதை அறங்காவலர் வசந்தா கவனத்திற்கு எடுத்துச் சென்றபோது அவர் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தினார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஐந்து பேர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, மேட்டுப்பாளையம் போலீசார், வனபத்ரகாளியம்மன் பரம்பரை அறங்காவலர் வசந்தா உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

பூசாரிகள் ரகுபதி, தண்டபாணி, விஷ்ணுகுமார், சரவணன் ஆகியோரை, ஏப்., 25ல் கைது செய்து சிறையில் அடைத்தனர்; அறங்காவலர் வசந்தா தலைமறைவானார்.

கைது செய்யப்பட்ட பூசாரிகளில் ரகுபதி, அறங்காவலர் வசந்தாவின் மருமகன். கோவில் அறங்காவலர் - உதவி கமிஷனர் இடையேயான மோதலின் உச்சகட்டம் தான் பூசாரிகள் கைது நடவடிக்கை என கூறப்படுகிறது.

இதுகுறித்து, பரம்பரை அறங்காவலரின் உறவினர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

கடந்த இரு ஆண்டு களாக கோவிலின் செயல் அலுவலராக கைலாசமூர்த்தி உள்ளார். ஒரு வருடம் 8 மாதம் வரை, எந்த பிரச்னையும் இல்லை. கடைசி 4 மாதங்களில் தான் பிரச்னைஉருவானது.

வனபத்ரகாளியம்மன் கோவிலில் தட்டு காணிக்கையை பூசாரிகள் எடுக்கக்கூடாது என கூறும் இவர், கோவிலின் உபகோவிலான பவானி ஆற்று அருகே உள்ள சுப்ர மணியசுவாமி கோவில், மற்றொரு உபகோவிலான மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள சக்தி விநாயகர் கோவில் போன்ற கோவில்களில் தட்டு காணிக்கை எடுக்கப்படுவது குறித்து எதுவும் பேசுவது இல்லை.

கைலாசமூர்த்தி பல முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். ஒப்பந்தப்புள்ளி கோராமல் 4 லட்சம் ரூபாய்க்கு கோவிலுக்கு, 'டிவி' வாங்கி உள்ளார். அதே போல, 4 அறைகளில் பாலுாட்டும் அறை கட்டப்படும் என கூறிவிட்டு, 3 அறைகளில் தான் கட்டியுள்ளார்.

அதேபோல் கோவிலில் உள்ள பல்வேறு பணிகளுக்கு நடைபெற்ற நேர்முகத் தேர்வில் வேண்டப்பட்டவர்களுக்கு மதிப்பெண்களை அள்ளி வழங்கினார். அதனால் அடுத்த நாள் நடக்கவிருந்த நேர்முகத் தேர்வை அறங்காவலர் வசந்தா ரத்து செய்தார்.

இவரின் முறைகேடுகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதனால்தான், பூசாரிகள்மீது தட்டு காணிக்கை கையாடல், அறங்காவலர் இதை கண்டுகொள்ளவில்லை என இவர் மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

போலீஸ் ஸ்டேஷனில் முதலில் எப்.ஐ.ஆர்., போடவில்லை, பின், மேட்டுப்பாளையம் நீதிமன்றம் வாயிலாக போலீஸ் ஸ்டேஷனில் எப்.ஐ.ஆர்., போட வைத்தார். இங்கு பணிபுரியும் கைது செய்யப்பட்ட பூசாரிகள் நிரந்தர பணியில் சேர்ந்தவர்கள் இல்லை. அவர்களுக்கு இரண்டு, மூன்று வருடங்களாக சம்பளம் தரப்படவில்லை.

அதிர்ச்சி

பூசாரிகளாக நியமிக்கப்பட்ட ஒருவர், அறங்காவலரின் உறவினர். அறங்காவலர் தன்னிச்சையாக நான்கு பேரையும் பணியில் சேர்த்துள்ளார் என புகார் உள்ளது.

ஆனால் அது உண்மை இல்லை. 2019ம் ஆண்டு பூசாரிகள் நியமிக்கப்பட்ட போது, வேலைக்காக விண்ணப்பித்தவர்கள் 16 பேர், அதில் 6 பேர் மட்டுமே தகுதியானவர்கள். 6ல் 4 பேர் இங்கு உள்ளனர்.

மற்ற இருவரில் ஒருவர் வேறு கோவிலில் பணிபுரிகிறார். ஒருவர் பணிக்கு வெகு நாட்களாகவே வரவில்லை. உதவி கமிஷனரின் இந்த மோதல் போக்கு சரியானது இல்லை.

இவ்வாறு உறவினர்கள் கூறினர்.

புகழ்பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவிலில் பரம்பரை அறங்காவலருக்கும், உதவி கமிஷனருக்கும் இடையே உள்ள மோதல் போக்கு பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கோவிலின் நலன் கருதி அரசு தலையிட்டு இதற்கு ஒரு சுமூகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

பூசாரிகள் தட்டு காணிக்கையை கையாடல் செய்ததற்கு வீடியோ ஆதாரம் உள்ளது. இது தொடர்பாக கடந்தஜனவரி மாதமே போலீஸ் ஸ்டேஷனில் புகார்அளித்துள்ளேன். பின், மேட்டுப்பாளையம் நீதிமன்றம் வாயிலாக எப்.ஐ.ஆர்., போடப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளனர். கோவிலில் நடக்கும் அனைத்து பணிகளும் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு தான்நடக்கிறது. என்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை.

கைலாசமூர்த்தி,

உதவி கமிஷனர், வனபத்ரகாளியம்மன் கோவில்






      Dinamalar
      Follow us