ADDED : செப் 16, 2024 07:26 AM

பெங்களூரு: சர்வதேச ஜனநாயக தினத்தை ஒட்டி கர்நாடகா மாநிலம் பெங்களூரில் மனித சங்கிலி துவக்க விழா நேற்று நடந்தது.
இதற்காக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது. முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர். மேடைக்கு முன் பொதுமக்கள் அமர்ந்திருந்தனர்.
அவர்கள் முன் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா வரவேற்புரை ஆற்றினார். அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு இளைஞர் மேடை மீது தாவி ஏறி சென்று முதல்வருக்கு சால்வை அணிவிக்க முயன்றார்.
இதை கவனித்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பிடித்து இழுத்துச் சென்றனர். அப்போது சால்வையை மேடை முன்பு வீசி விட்டார். என்ன நடக்கிறது என்று அங்கிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
தடுப்புகள் அமைத்தும் அதையும் தாண்டி ஒருவர் முதல்வரின் மேடையில் ஏறியது, பாதுகாப்பு குளறுபடி என்று சொல்லப்படுகிறது. அவர் ராம்நகர் மாவட்டம் கனகபுராவைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது.

