ADDED : ஏப் 29, 2024 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜோலார்பேட்டை : சென்னையிலிருந்து காட்பாடி - ஜோலார்பேட்டை, சேலம் வழியாக, கர்நாடக மாநிலம் மங்களூரு வரை செல்லும் மங்களூரு எக்ஸ் பிரஸ் ரயில், நேற்று முன்தினம் மாலை 4:20க்கு சென்னையில் இருந்து புறப்பட்டது.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கேதாண்டப் பட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்த போது, ரயிலுக்கு முழுமையாக சிக்னல் கிடைக்காததால், நடுவழியில் நிறுத்தப்பட்டது.
தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில், சேலம் கோட்டத்தில் ஏற்பட்ட கோளாறால் சிக்னல் தடைபட்டது தெரிந்தது. பின்னர் சிக்னல் சரி செய்யப்பட்டு மீண்டும் ரயில் இயக்கப்பட்டது.
இதனால், ஜோலார்பேட்டைக்கு வழக்கமாக, இரவு 7:28 மணிக்கு வர வேண்டிய அந்த ரயில், 8:47 மணிக்கு வந்தது. பின், மங்களூரு நோக்கி புறப்பட்டது. பயணியர் சிரமத்திற்கு ஆளாகினர்.

