ADDED : மார் 25, 2024 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி: தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பிரதமர் குறித்து அவதூறாக பேசிய தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தண்டுபத்து கிராமத்தில் மார்ச் 22 இரவில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில் ''பிரதமர் மோடி சேலம் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது காமராஜர் ஏதோ இவரை கட்டி அணைத்தது போல பேசுகிறார்''எனக் கூறி ஆபாசமான வார்த்தைகளை கூறினார்.
தி.மு.க., எம்.பி., கனிமொழி முன்னிலையில் அமைச்சரின் பேச்சு சர்ச்சையானது. பா.ஜ., மாவட்ட தலைவர் சித்ராங்கதன், தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகத்தில் புகார் செய்தார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீசார் அவதுாறு வழக்குப்பதிவு செய்தனர்.

