UPDATED : ஜூன் 11, 2024 09:13 PM
ADDED : ஜூன் 11, 2024 08:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கலவரம் செய்தால் தான் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியும் என்று பாஜக நிர்வாகியுடன், இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகி உடையார் பேசிய ஆடியோ நேற்று வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் விதமாகவும் பேசிய உடையார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

