UPDATED : மார் 27, 2024 09:33 AM
ADDED : மார் 26, 2024 11:54 PM
* விருதுநகர் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் நடிகை ராதிகாவின் சொத்து மதிப்பு 53 கோடி ரூபாய். மாற்று வேட்பாளரான கணவர் சரத்குமாருக்கு 29.82 கோடி ரூபாய். இதே தொகுதியில் போட்டியிடும், மறைந்த விஜயகாந்த் மகனும், தே.மு.தி.க., வேட்பாளருமான விஜய பிரபாகரனுக்கு 17.95 கோடி ரூபாய் சொத்து உள்ளது.
*திருச்சி லோக்சபா தொகுதியில், ம.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வைகோவின் மகன் துரைக்கு, 35.90 கோடி ரூபாய் சொத்து உள்ளது. இதே தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் கருப்பையாவுக்கு 2.82 கோடி ரூபாய் சொத்தும், 3.07 கோடி ரூபாய் கடனும் உள்ளது.
* துாத்துக்குடி தி.மு.க., - எம்.பி., கனிமொழியின் சொத்து மதிப்பு, கடந்த 5 ஆண்டுகளில் 27 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன், 30 கோடி ரூபாயாக இருந்த அவரின் சொத்து மதிப்பு, தற்போது, 57.32 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
*வேலுார் லோக்சபா தொகுதியில், பா.ஜ., கூட்டணி சார்பில், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பா.ஜ.,வின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் தன் பெயரில், மனைவி பெயரில், 152.77 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளதாக, 28.84 கோடி ரூபாய் கடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
*வேலுார் தொகுதியில், தி.மு.க., சார்பில், அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இவர் தன் பெயரிலும், தன் மனைவி பெயரிலும், 88.73 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாகவும், கடன், 49.98 கோடி ரூபாய் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதே தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பசுபதி, 5.13 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து, 1.48 கோடி ரூபாய் கடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
*தர்மபுரி தொகுதியில் பா.ம.க., சார்பில், அக்கட்சியின் தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிடுகிறார். இவர் தன் பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும், 60.23 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
*கரூர் லோக்சபா தொகுதி, பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன் குடும்பத்திடம் அசையும் சொத்துக்கள், 7.37 கோடி; அசையா சொத்துக்கள், 3.80 கோடி ரூபாய் என மொத்தம், 11.18 கோடி ரூபாய் உள்ளது. 1.35 கோடி ரூபாய் கடன் உள்ளது.

