பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது: தலைமை செயலாளர் அறிவுறுத்தல்
பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது: தலைமை செயலாளர் அறிவுறுத்தல்
ADDED : மே 09, 2024 07:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கோடை விடுமுறையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என அனைத்து பள்ளிகளுக்கும் தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா பிறப்பி்த்துள்ள உத்தரவில், கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் பள்ளி குழந்தைகளின் நலன் கருதி கோடை விடுமுறை தினத்தில் அனைத்து பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. இதனை நடைமுறைப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறுஅவர் கூறியுள்ளார்.