ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் நாளை சென்னைக்கு வருகை
ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் நாளை சென்னைக்கு வருகை
UPDATED : மார் 29, 2024 07:53 PM
ADDED : மார் 29, 2024 07:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அனுஷபூஜையில் கலந்து கொள்ள நாளை (30-ம் தேதி)சென்னைக்கு வரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் அருளாசி பெற வருமாறு பக்தர்களுக்கு காஞ்சி மகாஸ்வாமி ட்ரஸ்ட் அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை ராஜகீழ்பாக்கத்தில் அமைந்துள் ஸ்ரீ காஞ்சி மகாஸ்வாமி வித்யாமந்திர் பள்ளிக்கு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் நாளை (30 ம் தேதி) சனிக்கிழமை மாலை வருகை தர உள்ளார்.
அன்றைய தினம் நடைபெற உள்ள அனுஷபூஜையில் அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டு காஞ்சி ஆச்சார்யர்களின் அருளாசியை பெறறுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்து உள்ளது.

