ஸ்ரீவி.,- மேகமலை புலிகள் காப்பகத்தில் மே 23 முதல்- யானைகள் கணக்கெடுப்பு
ஸ்ரீவி.,- மேகமலை புலிகள் காப்பகத்தில் மே 23 முதல்- யானைகள் கணக்கெடுப்பு
ADDED : மே 21, 2024 07:55 AM
கம்பம் : ஸ்ரீவில்லிபுத்தூர் -மேகமலை புலிகள் காப்பகத்தில் மே 23 முதல் 25 வரை யானைகள் கணக்கெடுப்பு நடக்கிறது.
2023 கணக்கெடுப்பு படி கர்நாடகாவில் 6395 யானைகள் உள்ளதாக தெரிய வந்தது. 2017க்கு பின் அங்கு 345 யானைகள் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்தாண்டு கணக்கெடுப்பின்படி 2961 யானைகள் இருந்தன. மே 23 முதல் 25 வரை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுப்பை நடத்த வனத்துறை முடிவு செய்துள்ளது.
மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆனந்த் கூறியது: 3 நாட்கள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
முதலில் மே 17 ல் நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் தென் மாநிலங்கள் ஒரே சமயத்தில் நடத்துவதால் மே 23 துவங்குகிறோம். வனத்துறையினர், வனவியல் படிக்கும் மாணவர்கள் என 200 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் முழுமையாகவும், ஆந்திராவில் ஒரு பகுதியும் கணக்கெடுப்பில் ஈடுபடுகின்றன என்றார்.
கணக்கெடுப்பில் நீர்நிலைகளுக்கு அருகில் தென்படும் கால்தடம், சாணம், நேரடியாக பார்ப்பது போன்ற முறைகள் பின்பற்றப்படுகிறது.

