உதயநிதிக்கு பட்டம் சூட்ட கனிமொழியை தள்ளி வைத்தாார் ஸ்டாலின்
உதயநிதிக்கு பட்டம் சூட்ட கனிமொழியை தள்ளி வைத்தாார் ஸ்டாலின்
ADDED : ஏப் 01, 2024 11:23 PM

தூத்துக்குடி :உதயநிதிக்கு பட்டம் கட்டுவதற்காக ஸ்டாலின் கனிமொழியை ஆட்சியிலையோ, கட்சியிலையோ, சென்னையிலையோ இருக்கவே கூடாதுன்னு தள்ளி வைத்துள்ளார் என அதிமுக துணை கொள்கை பரப்பு செயலாளர் நடிகை விந்தியா பேசினார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சிவசாமி வேலுமணிக்கு ஆதரவாக தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் திறந்தவெண் என்ற வரை பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது பேசிய அவர், கனிமொழிக்கு புரியுதா இல்லையான்னு தெரியல. கனிமொழி யாரு மூத்த அரசியல்வாதி, முன்னாள் முதல்வர், திமுக தலைவர் கருணாநிதியோட பொண்ணு. ஆனா கனிமொழியை ஏதோ ஒரு ஜாதி தலைவர் மாதிரி இந்த தூத்துக்குடிக்கு மட்டுமே சுருக்கி வைத்திருக்கிறார் ஸ்டாலின்.
ஏன் ஆட்சியிலையோ, கட்சியிலையோ, சென்னையிலையோ இருக்கவே கூடாதுன்னு தள்ளி வச்சிருக்கார். ஏன் என்றால் அப்பதான் ஒண்ணுமே தெரியாத உதயநிதிக்கு பட்டம் கட்ட முடியும் . யோசிச்சு பாருங்க. திமுக கட்சியில் தலைமை பதவிக்கு கருணாநிதிக்கு அப்புறம் கருணாநிதி பையன் ஸ்டாலின் சரி ஒத்துக்கலாம். அவருக்கு அப்புறம் கருணாநிதி மடியில் வளர்ந்த கனிமொழி தானே தலைவராகணும் நடுவுல இந்த பால்டாயில் பாய் எங்க இருந்து வந்தாரு, எப்ப வந்தாரு அரசியலுக்கு இதெல்லாம் கனிமொழி யோசிக்கணும்.
கனிமொழி, கனிமொழி உரிமைக்காகவே ஸ்டாலினை எதிர்த்து கேள்வி கேட்கிறது இல்லை. நாளைக்கு ஜெயிச்சு எம்பி ஆனா உங்க உரிமைகளுக்காக ஸ்டாலின் கிட்ட சண்டை போடுவாங்கன்னு நினைக்கிறீங்க சத்தியமா போட மாட்டாங்க அவங்களுக்கு அவங்க சுயநலத்துக்காக சொந்த லாபத்துக்காக அடையாளத்துக்காக எம்பியாக நினைக்கிறார்களே தவிர தூத்துக்குடி மக்கள் மேல பாசம் வைத்திருக்கிறதினால் எல்லாம் கிடையாது.
கடந்த தேர்தலில் பல பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி வெற்றி பெற்ற கனிமொழி கடந்த ஐந்து வருடத்தில் இந்த தொகுதியில் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. தற்போது மீண்டும் எதிர்க்கட்சி வேட்பாளர் போன்று மீண்டும் நான் வெற்றி பெற்றால் இதை செய்வேன் அதை செய்வேன் என்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைத்தார்களா? கஞ்சா , மது ஒழித்தார்களா என கேள்வி எழுப்பிய அவர் திமுக இந்த தேர்தலில் நீட் பத்தியோ, சிஏஏ குடியுரிமை பற்றியோ ஏன் பேசவில்லை. தமிழக மீனவர்கள் பற்றி கவலைப்படாதவர்கள் தான் திமுகவினர். கடந்த தேர்தலில் பொய்யான வாக்குறுதி அளித்தது போல் இந்த தேர்தலிலும் நாங்கள் ஜெயித்தால் சிலிண்டர் 500 ரூபாய்க்கு தருகிறோம், பெட்ரோல் 75 ரூபாய்க்கு தருகிறோம், டீசல் 65 ரூபாய்க்கு தருகிறோம் என பொய்யான வாக்குறுதிகளை திமுக அளித்து வருகிறது.
தமிழக மக்கள் இழந்த உரிமையை மீட்டெடுக்க பல பொய்யான வாக்குறுதிகளை அளித்த தீமுகவிற்கு தக்க பதிலடி கொடுக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. திமுகவிற்கு ஓட்டு போடுவதும் குரங்குக்கு கோர்ட்டு போடுவதும் ஒன்று என்று அவர் கூறினார்.

