ADDED : மே 14, 2024 04:51 AM

ஸ்ரீமுஷ்ணம்: உடல் உறுப்பு தானம் வழங்கிய வாலிபரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் திருப்பானாழ்வார் தெருவை சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன் மகன் கருணாகரன்,30; டிப்ளமோ படித்தருந்த இவர், செங்கல்பட்டு அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு திருமணமாகியது, அவரது மனைவி 4 மாத கர்ப்பமாக உள்ளார்.
இந்நிலையில், கடந்த 10ம் தேதி சென்னையில் நடந்த சாலை விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு, கருணாகரன் உயிரிழந்தார். கருணாகரனின் உறவினர்கள், அவரது உடலை உறுப்பு தானம் செய்ய ஒப்புக்கொண்டு நேற்று முன்தினம் உடல் உறுப்புகளை தானம் செய்தனர்.
அதனடிப்படையில் நேற்று ஸ்ரீமுஷ்ணம் கொண்டுவரப்பட்ட கருணாகரன் உடலுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ், எஸ்.பி. ராஜாராம் ஆகியோர், அரசு சார்பில் மலர்வளையம் வைத்து, மரியாதை செலுத்தினர். ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் சேகர், சேத்தியாதோப்பு டி.எஸ்.பி. ரூபன்குமார உடனிருந்தனர்.
