பாசன நீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை: கிருஷ்ணசாமி உறுதி
பாசன நீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை: கிருஷ்ணசாமி உறுதி
ADDED : ஏப் 10, 2024 06:43 AM

தென்காசி : தென்காசி தொகுதியில் விவசாய பாசன தண்ணீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என இத்தொகுதி அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளரான புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:இத்தொகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இதற்கான தண்ணீருக்கு ஆதாரமாக குண்டாறு, மோட்டை, ஸ்ரீ மூலப் பேரி, அடவி நயினார், கருப்பாநதி போன்ற அணைக்கட்டுகள் உள்ளன. இதனை ஆய்வு செய்தேன். இவை பராமரிக்கப்படாமல் உள்ளன. லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றால் எனது முதல் பணியாக இவற்றை தூர்வாரி மதகுகளைப் பழுது நீக்க ஏற்பாடு செய்வேன். இதன் மூலம் பாசன தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படும்.
மணலாறு நதியை அடவி நயினார் அணையுடன் இணைத்தால் தென்காசி, விருதுநகர், துாத்துக்குடி மாவட்டத்திற்கு நீர் ஆதாரம் கிடைக்கும். தென்காசி மற்றும் கடையநல்லுார் பகுதியில் விவசாயிகள் வன விலங்குகளால் பாதிப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பேன். தென்காசியை மிக சிறந்த சுற்றுலாதலமாக மேம்படுத்த முயற்சியை செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

